இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதியின் செயலாளர் திரு. ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்க, இலங்கை நிர்வாக சேவையின் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டவராவார். அவர் இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்ற சமூகவியல் சிறப்புப் பட்டத்தையும், பொது நிர்வாகத்தில் பட்டப் பின்படிப்பு டிப்ளோமாவையும், இலங்கை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இதற்கு மேலதிகமாக பொது நிர்வாகம் குறித்த முதுமானி பட்டமொன்றையும் கொண்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தில் பெற்ற தொழில்வாண்மைத்துவ இராஜதந்திரதுறைசார் டிப்ளோமா பட்டத்தையும் அவர் கொண்டுள்ளார்.
திரு. ஏக்கநாயக்க, இளைஞர் விவகாரம், மனித வள முகாமைத்துவம். வறுமை ஒழிப்பு, வீடமைப்பு, நகர அபிவிருத்தி மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் பொதுக் கொள்கையை விருத்தி செய்வதில் ஒரு பன்முக அனுபவத்தைக் கொண்டுள்ளார். வேளிவிவகார அமைச்சு, லண்டன் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இலங்கைத் தூதரகங்;களில்; பணியாற்றிய அவரது பலதரப்பட்ட ராஜதந்திர அனுபவம், சர்வதேச உறவுகளைக் கையாள்வதில் அவருக்கு ஒரு மேலதிக அனுகூலமாக அமைந்துள்ளது. திரு. ஏக்கநாயக்க வீடுகள் நிர்மாணிப்பு, சமூக உட்கட்டமைப்பு மீளமைப்பு, இடரிலிருந்து மீளும் நகர் திட்டங்களை விருத்தி ஆகிய துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இலங்கையில் வடக்குக் கிழக்கில் மோதலினால் பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவளிப்தற்கான கருத்திட்டங்களை அமுல்படுத்தும் UN-HABITAT நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் வதிவிட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தற்போதைய நியமனத்திற்கு முன்னர், அவர் பிரதம மந்திரியின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
தொழில்வாழ்க்கை வரலாறு
· ஜூலை 2022 – இற்றைவரை | சனாதிபதியின் செயலாளர் |
· மே 2022 – ஜூலை 2022 வரை | பிரதமரின் செயலாளர் |
· ஜனவரி 2015 – நவம்பர் 2019 வரை | பிரதமரின் செயலாளர் |
· ஜூன் 2014 – ஜனவரி 2015 வரை | வதிவிட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் UN-HABITAT |
· ஓகஸ்ட் 2013 – மே 2014 வரை | ஒருங்கிணைப்பாளர் UN-HABITAT |
· பெப்ரவரி 2012 – ஓகஸ்ட் 2013 வரை |
பணிப்பாளர் நாயகம் / நிதி அமைச்சு |
·செப்டெம்பர் 2008 – ஜனவரி 2012 வரை |
மினிஸ்ட்டர், இலங்கை உயர் ஸ்தானிகராலயம், இலண்டன் |
· செப்டெம்பர் 2005 – செப்டெம்பர் 2008 வரை |
பணிப்பாளர் நாயகம் / வெளிநாட்டலுவல்கள் அமைச்சு |
· ஒகஸ்ட் 2002 – ஓகஸ்ட் 2005 வரை | மினிஸ்ட்டர், இலங்கை உயர் ஸ்தானிகராலயம், கோலாலம்பூர் |
· ஏப்ரல் 2000 – ஓகஸ்ட் 2002 வரை | பணிப்பாளர் / நிர்வாகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு |
· நவம்பர் 1997 – ஏப்ரல் 2000 வரை | பணிப்பாளர் / நிர்வாகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் |
· செப்டெம்பர் 1996 – நவம்பர் 1997 வரை |
பிரதிப் பணிப்பாளர், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு |
· செப்டெம்பர் 1994 – செப்டெம்பர் 1996 வரை |
உதவிச் செயலாளர், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு |
· ஜூன் 1993 – செப்டெம்பர் 1994 வரை |
உதவிச் செயலாளர், பிரதம மந்திரி அலுவலகம் |
· பெப்ரவரி 1992 – ஜூன் 1993 வரை | உதவிப் பணிப்பாளர், அரசாங்கத தகவல் திணைக்களம் |
· மார்ச் 1989 – பெப்ரவரி 1992 வரை | உதவிச் செயலாளர், இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சு |
· நவம்பர் 1986 – மாரச் 1989 வரை | உதவிச் செயலாளர், மனிதவள ஒன்றுதிரட்டல் அமைச்சு |
· ஜூன் 1986 – நவம்பர் 1986 வரை | உதவிச் செயலாளர், அரச சேவைகள் ஆணைக்குழு |
· மே 1985 – மே 1986 வரை | இலங்கை நிர்வாக சேவைகள் கெடேட், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் |