75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தின் “Path to Freedom” விசேட கண்காட்சியை நேற்று (04) கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் திறந்துவைத்தார்.
தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம் ஆகியன இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
கண்காட்சியின் திறப்பு விழாவிற்கு வருகைதந்த ஜனாதிபதியை புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வரவேற்றார்.
1919-1972 வரையிலான சுதந்திரப் போராட்டம் தொடர்பான வரலாற்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வுகளை பிரதிபலிக்கும் பத்திரிகைகளின் முகப்புப் பக்கங்களின் தொகுப்பான “சுதந்திரத்தின் முதற்பக்கங்கள்” என்ற தலைப்பிலான ஆவணமொன்றை, தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்க, ஜனாதிபதியிடம் கையளித்தார்.
யுனெஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட நான்கு அரிய புத்தகங்களான A Gazetteer of the Central Province of Ceylon, volume I & II, The Geology of sri lanka, Sigiri Graffiti volume II மகா வம்சத்தின் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் நூல், தேசிய அருங்காட்சியகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனூஜா கஸ்தூரியாரச்சியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
‘உருமயக்க அருமய’ களனி விகாரை சுவரோவிய நூல் தொகுப்பு, பண்டைய இலங்கையின் கௌதம புத்தரின் சிலைகள் அடங்கிய புத்தகம், கண்டி சுவரோவிய சங்க நூல், Ancient Ceylon Volume 26, Roots of Sri Lankan arts, History of the kingdom of Rohana ஆகியவற்றை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க ஜனாதிபதியிடம் வழங்கிவைத்தார்.
மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்கவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“Path to Freedom” கண்காட்சி பெப்ரவரி 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொழும்பு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.