ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட “டிஜிட்டல் இலங்கைக்கான 2030 மூலோபாய செயல்முறை” உலக வங்கியின் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவைப் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் முயற்சியாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறையின் முன்னணி அமைப்பான இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனம், DigiGo வர்த்தக நாமத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான டிஜிடல் பிளேபுக் (Digital Playbook) ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்வு, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அவர்களின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் இடம்பெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய இயலுமையுடன் உள்நாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கு பிரவேசிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அனுசரணையுடன் LK Domain Registry நிறுவனத்துடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவின் மூலம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SMEs) இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னணி காரணியாக இருப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 52% பங்களிப்பை வழங்குகின்றது. இந்த நாட்டில் 75% க்கும் அதிகமான வர்த்தகத் துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இதில் 20% ஏற்றுமதித் துறையில் பங்களிப்பு செய்கின்றன.
நவீன தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகங்களை இணைத்து இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்த DigiGo நிகழ்ச்சி மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட முதலாவது DigiGo நிகழ்ச்சித் திட்டம் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரின் தலைமையில் ஒக்டோபர் 20ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,
DigiGo 2030 இன் முக்கிய நோக்கம், 2030 ஆம் ஆண்டிற்கான தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதாகும். டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்தை உருவாக்கும் ஆறு முக்கிய தூண்களில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அடங்குகின்றன.
அதன்படி, டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இலங்கையில் உள்ள அனைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் டிஜிட்டல் மாற்றம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வுக்கான அடித்தளம் இதன் ஊடாக அமைக்கப்படுகிறது. உலக வங்கி இந்த செயல்முறைக்கு தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த உலக வங்கியின் உள்நாட்டு முகாமையாளர் (மாலைத்தீவு மற்றும் இலங்கை) திருமதி சியோ கந்தா,
DigiGo அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு டிஜிட்டல் வர்த்தக அபிவிருத்தி சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. டிஜிட்டல் மேம்பாடு என்பது எமது காலத்தின் ஒரு மாற்றத்தக்க வாய்ப்பாகும். இது உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களை எதிர்கொள்ளல், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் சந்தைகளை உருவாக்குதல் மற்றும் நிதிக்கான அணுகலை விரிவுபடுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய மற்றும் இயன்றளவு நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்ள இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்படி, 2030 ஆம் ஆண்டாகும்போது தேசிய வர்த்தக மூலோபாயம் ஒன்றை தயாரித்து செயல்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கானது இந்த வேலைத்திட்டத்தின் முக்கியமான படிமுறையாகும்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், தேசிய வருமானத்திற்கு பங்களிப்பதற்கு உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்குகின்றது என்றே கூற வேண்டும். எவ்வாறாயினும், உலகளாவிய ரீதியில் மற்றும் இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் போதியளவு அறிவின்மையுடன் டிஜிட்டல் மாற்றங்களை நோக்கி நகர்வதில் பல சவால்களை எதிர்கொள்கின்றன.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மாற்றத்தில் அவசியமான அறிவை வழங்கும் ஒரு அறிவார்ந்த பங்காளியாக உலக வங்கி இருப்பதில் பெருமிதம் கொள்வதுடன், எதிர்கால தேசிய டிஜிட்டல் மூலோபாயத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பரவலாக்கத்திற்கான மையமாக இருப்பது குறித்தும் மகிழ்வடைகின்றது. டிஜிட்டல் இலங்கைக்கான 2030 தேசிய மூலோபாயத்தை தயாரிப்பதில் அரச மற்றும் தனியார் துறைக்கு அவசியமான தொழில்நுட்ப ஆதரவை தொடர்ந்து வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
DigiGo ஆனது, தரவு பகுப்பாய்வு முதல் ஈ – வர்த்தகம் வரை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குதல் மற்றும் இந்தத் தொழில்துறை நிபுணர்களால் வளர்ந்து வரும் போக்குகள், சிறந்த நடைமுறைகள் டிஜிட்டல் புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் உத்திகள் பற்றிய புரிதலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சம்மேளனத்தின் (FITIS) தலைவர் இந்திக்க டி சொய்சா தெரிவித்தார்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.