ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அழகன், அழகிப் போட்டி
“வசத் சிரிய” புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வர்ணப் புகைப்படத்துடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 20-35 வயதெல்லைக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.
விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து chiefacct.pd@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2023.04.20 ஆம் திகதி 3.00 மணிக்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.
முதலாவது , இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெறுவோருக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும். போட்டி நிபந்தனைகள் தொடர்பிலான இறுதி முடிவு ஏற்பாட்டு குழுவுடையதாகும். மேலதிக தகவல்களுக்கு தொ.இல 0702025095 ஊடாக ஏ.ஜீ.எம்,சங்கா (ஒருங்கிணைப்பாளர்) அவர்களை தொடர்புகொள்ளமுடியும்.
மரதன் ஓட்டம்
அதேபோல் “வசத் சிரிய” மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்கெடுக்க விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான தூரம் ஓடக்கூடியவர்கள் என வைத்திய சான்றிதழுடன் விண்ணப்பிப்பது அவசியமாகும்.
இந்த விண்ணப்படிவங்கள் 2023 ஏப்ரல் 21 ஆம் திகதி 12.00 மணிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தின் பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட வேண்டும். Priyanthalalwkas@gmail.com மின்னஞ்சல் முகவரி அல்லது WhatsApp எண் 0710573828 ஊடாகவும் அவற்றை அனுப்பலாம்.
மரதன் போட்டிகளின் (ஆண்கள்) முதலாமிடம் பெறுபவருக்கு 75,000 ரூபாவும் இரண்டாம் இடம் பெறுவபவருக்கு 50,000 ரூபாவும் மூன்றாமிடம் பெறுபவருக்கு 30,000ரூபாவும் வழங்கப்படும். நான்கு தொடக்கம் பத்து வரையிலான இடங்களை பெறுவோருக்கு 7500 ரூபா வீதம் வழங்கப்படும்.
மகளிருக்கான மாரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு 50,000 ரூபாவும், 2ஆம் இடம் பெறுபவருக்கு 30,000 ரூபாவும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு 20,000 ரூபாவும், நான்காம் முதல் பத்தாம் இடங்களை பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும் வழங்கப்படும்.
சைக்கிளோட்டம்
அதேபோல் ஸ்டேண்டட் சைக்கிளோட்டப் போட்டிகள் (ஆண் /பெண்) நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது. இப் போட்டிகளை இலங்கை விமானப் படை மற்றும் இலங்கை சைக்கிளோட்ட கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யவுள்ளன.
காலி முகத்திடலில் இருந்து, நீர்க்கொழும்பு வீதியூடாக, ஜா–எல, கட்டுநாயக்க, மினுவங்கொடை, வெயங்கொடை, நிட்டம்புவ, கண்டி வீதி, கடவத்தை, பேலியகொடை, காலி முகத்திடல் வரையில் ஆண்களுக்கான ஸ்டேண்டட் சைக்கிளோட்ட போட்டிகள் இடம்பெறவுள்ளது. பெண்களுக்கான சைக்கிளோட்ட போட்டி காலி முகத்திடலில் ஆரம்பமாகி காலி வீதியூடாக , பாமன்கடை, பிலியந்தலை, கெஸ்பேவ, கொட்டாவ, மஹரகம, நுகேகொட, தும்முள்ளைச் சந்தி, பித்தலைச் சந்தி, லேக் ஹவுஸ் வழியாக காலி முகத்திடல் வரையில் இடம் பெறவுள்ளது.
1973 வருடத்திற்கு பின்னரும் 2004 ஆம் ஆண்டிற்கு முன்னரும் பிறந்த இலங்கை சைக்கிளோட்ட (ஆண்/ பெண்) வீர வீராங்கணைகள் இப் போட்டியில் பங்குபற்றலாம்.
ஸ்டேண்டட் சைக்கிளின் முன்பக்க மற்றும் பின் பக்க பரப்பு 48 மற்றும் 18 ஆகவும், கைப்பிடி ரெஸ்ட் பார் / ஹெக் பார் கொண்டதாக காணப்படல் வேண்டும்.
குறித்த விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து போட்டியிடுவதற்கு தகுந்த உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் வைத்தியரின் உறுதிப்படுத்தலுடன் ஏற்பாட்டு குழுவிற்கு wasathsiriya2023race@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 0788429688 எனும் Whatsapp உடாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
2023 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கபெறும் விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது என்பதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு Whatsapp ஊடாக அறிவிக்கப்படும். விண்ணப்பித்தல் மற்றும் பதிவுகளுக்கான கட்டணம் அறவிடப்படமாட்டாது.
ஸ்டேண்டட் சைக்கிளோட்ட போட்டிகள் (ஆண்கள்) முதலாமிடம் 100,000 ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு 75,000 ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 50,000 ரூபாயும், நான்காம் இடத்திற்கு 30,000 ரூபாயும் ஐந்தாம் இடத்திற்கு 20,000 ரூபாயும் 6 – 10 வரையான இடங்களுக்கு 9,000 ரூபாய் வீதமும் 11- 15 ஆம் இடங்களுக்கு 5,000 வீதமும் வழங்கப்படவுள்ளது.
மகளிருக்கான போட்டியில் முதலாமிடம் பெறுபவருக்கு 50,000 ரூபாயும், இரண்டாம் இடத்திற்கு 40,000 ரூபாவும், மூன்றாமிடத்திற்கு 30,000 ரூபாவும், நான்காம் இடத்திற்கு 20,000 ரூபாவும் ஐந்தாம் இடத்திற்கு 15,000 ரூபாவும் 6 – 10 வரையான இடங்களுக்கு 9,000 ரூபாய் வீதமும் வழங்கப்படவுள்ளது.
கயிறு இழுத்தல்
கயிறு இழுத்தல் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் போட்டி நடத்தப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பாக கிடைக்கபெறல் வேண்டும். அது தொடர்பில் 0717880695 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
ஓரு குழுவில் 8 போட்டியாளர்கள் இணைந்துகொள்ள முடியும் என்பதோடு, மேலதிக வீரர்கள் இருவருவருடன் மொத்தமாக 10 பேர் பங்குபற்ற முடியும்.
ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து அரச நிறுவனங்களையும் இணைத்துகொண்டு நடத்தப்படவுள்ள “வசத் சிரிய” தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் ஏபரல் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் கொழும்பு சங்கரில்லா கீரீன் திடலில் நடைபெறவுள்ளதோடு, அரச துறையினர், திறந்த பிரிவுகள், விருந்தினர் பிரிவு என்ற 03 பிரிவுகளின் கீழ் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இசை நிகழ்ச்சி இரவு 7.00 மணிக்கு அதே இடத்தில் ஆரம்பமாகும்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.