Published on: அக்டோபர் 16, 2023

சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறும் அவதூறு மற்றும் பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு முறைமையொன்று அவசியம் – பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகாரசபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்

சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் நோக்கில் அல்லது பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

“ஒன்லைன் முறைகளின் பாதுகாப்பு தொடர்பான ஆணைக்குழுவின் நியமனத்தின் ஊடாக, ஆய்வு ரீதியிலான ஊடகவியலாளரும் அதேபோன்று ஆராய்ந்து பார்க்கக்கூடிய பிரஜையும் உருவாக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இணையத்தளத்தின் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படும் அதேவேளை, ஆணைக்குழுவுக்கு தண்டனை வழங்கும் உரிமையும் இல்லை என்றும் வஜிர அபேவர்தன எம்.பி தெரிவித்தார்.

உலகிலும் இலங்கையிலும் தொடர்பாடல் வளர்ச்சியடைந்ததன் மூலம் மக்கள் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றனர். ஆனால் இறுதியில் மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றமை ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.எனவே, இந்த சமூக ஊடகங்களை உருவாக்கியவர்களே அதற்கான விதிகளை கொண்டு வந்தனர்.

தற்போது இலங்கையிலும் சமூக ஊடகக் கண்காணிப்பின் அவசியம் குறித்து பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகிறது.

தற்போது இலங்கையில் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொலைக்காட்சிச் சட்டத்தால் மாத்திரமே கட்டுப்படுத்தப்படுகின்றன. அது எவ்வகையிலும் நியாயமான ஊடக வளர்ச்சிக்கு பொருத்தமற்றது.

அவ்வாறென்றால், உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் தகவல் தொடர்பாடலை அல்லது ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும், மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும், சட்ட விதி முறைகளை தயாரித்துள்ளன.

உதாரணமாக, சிங்கப்பூரின் தகவல் தொடர்பாடல் ஊடக மேம்பாட்டு அதிகார சபைச் சட்டம் (Info-communications Media Development Authority Act 2016) சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

உதாரணமாகக் கூறினால், குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் Facebook, Twitter, Tiktok, Instagram மற்றும் Youtube போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வழங்கப்படும் செய்திகள் குறித்து மிகவும் சங்கடமான சூழ்நிலையில் உள்ளனர். இளைஞர்கள் வாழ்நாளில் மிகவும் பெறுமதியான அழகிய காதல் கதைக்கும் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில் அது, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கும் இவ்வகையான சமூக ஊடக வலையமைப்பு மூலம் இடம்பெறுகின்றமையினால் அவர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளதுடன் இதற்கு, சட்ட விதிகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உலகில் உள்ள Facebook உள்ளிட்ட ஏனைய தகவல் பரிமாற்றத் தளங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைக் கட்டுப்படுத்தல், சரியான தகவல்களை சிறந்த முறையில் மக்களுக்கு வழங்குவது மற்றும் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதல் ஆகியவை கற்ற மற்றும் முன்னேறி வரும் ஒரு சமூகத்துக்கு மிக முக்கியமான விடயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், ஆசியாவிலும், உலகிலும் இலங்கை வலுப்பெற்று நிற்க, ஊடகங்களின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். இலங்கையிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களும் சிங்கப்பூரின் ஊடகச் சட்டத்தை வாசித்தால் அது மிகவும் முக்கியமானது. ஒளிபரப்பு சேவை அனுமதி வழங்குவதற்கும், அதை இரத்து செய்வதற்கும், தவறான தகவல்களை வழங்கினால் அதைத் திருத்துவதற்குத் தேவையான தண்டனை விதிக்கவும் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தகைய நாடுகள் உலகில் பலம் வாய்ந்த நாடுகளாக மாறிவிட்டன.

அரசியலில் ரீதியில் சிந்தித்துப் பார்த்தாலும் கூட, அரசியலில் பொய்களை பரப்பும் கலாசாரம் இலங்கையில் மாற வேண்டும். அதேநேரம், அத்தியாவசியமான உண்மைகளை மறைக்காமல் இருப்பது குறித்தும் ஊடகங்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, இத்தகைய கண்காணிப்பு முறை, ஊடகங்களை வலுப்படுத்துமே தவிர ஊடகங்களைக் கட்டுப்படுத்தாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மற்றும் அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் சரியான தகவல்களை வழங்குவது முழு நாட்டிற்கும் பயனுள்ள செயலாகும். அதனை வலுப்படுத்தும் வகையில், அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து, ஊடகங்களில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகள், ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை முன்வைக்கவும் வாய்ப்பு உள்ளது.

இப்போது நமது அண்டை நாடான இந்தியா Tiktok சமூக ஊடகம் உட்பட 58 தொலைபேசி செயலிகளை தடை செய்துள்ளது.

எவ்வாறாயினும் பல அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி பேசுகிறார்கள், ஜப்பானைப் பற்றி பேசுகிறார்கள், சிங்கப்பூரைப் பற்றி பேசுகிறார்கள், தென் கொரியாவைப் பற்றி பேசுகிறார்கள், சீனாவைப் பற்றி பேசுகிறார்கள்.

அவற்றை முன்னேறிய நாடுகள் என்பதற்கு உதாரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் வளர்ந்த நாடுகளாக உள்ள நாடுகளின் சட்ட விதிமுறைகளை யாரும் தெரிந்துகொள்ள முயல்வதில்லை. மலேசியாவைப் பற்றியும் கூறப்படுகிறது.

அந்த நாடுகள் உலகின் முன் சக்தி வாய்ந்ததாக நிற்பதற்குத் தேவையான அனைத்து அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளையும் முழுமையாகத் தயாரித்துள்ளன. எனவே இலங்கையர்கள் என்ற வகையில், ஊடகத்துறையை விருத்தி செய்வதற்கும் இலங்கை மக்களை உயர்மட்ட அறிவுத்துறைக்குக் கொண்டு செல்வதற்கும் தற்போது முறைமையற்ற ஊடக கலாசாரத்தை சட்டப்பூர்வமாக்குவது மிகவும் அவசியமாகும்.

மக்களே, மக்களை இழிவுபடுத்துவது, மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, போன்று மக்களே மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லப்படுவதைத் தடுப்பது ,புதிய ஒளிபரப்பு அதிகார சபைச் சட்டமான “ஒன்லைன் முறைகளின் பாதுகாப்பு தொடர்பிலான சட்டம்” மூலம் செய்யப்படும் முக்கிய செயல்முறைகளில் ஒன்றாகும். உலக அரங்கில் இலங்கை, வலுவான இருப்பை வைத்திருப்பதற்கு இது மிகவும் முக்கியமானது என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரசபையின் மூலம் தண்டனை வழங்க முடியாது. நீதவான் நீதிமன்றமோ அல்லது வேறு எந்த நீதிமன்றமோ மாத்திரமே தண்டனை வழங்க முடியும். இந்த புதிய சட்ட விதிகள் மூலம் ஆய்வு ரீதியிலான ஊடகவியலாளரும் அதேபோன்று ஆராய்ந்து பார்க்கக்கூடிய பிரஜையும் உருவாக்கப்படுவர். இது இனங்களுக்கிடையே வெறுப்பை விதைப்பதையும் நீக்குகிறது. இந்தச் சட்டங்கள் மக்களுக்கு உண்மையை அறியும் உரிமையை உறுதிப்படுத்துகின்றன.”என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.