Published on: பிப்ரவரி 13, 2024

கல்வி வௌ்ளை அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு சிறப்பான கல்வி முறையொன்று கிடைக்கும் – ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வித் துறையில் மேற்கொள்ள முயற்சித்த மாற்றத்தை முழுமையாக செய்ய முடியுமானால், நாட்டுக்கு சிறப்பான கல்வி முறைமையொன்று கிடைக்குமென ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

மொனராகலை புதுருவகல மகா வித்தியாலயத்திற்கு இசைக் கருவிகளைப் பெற்றுக்கொடுக்கும் (09) நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் இந்த பாடசாலைக்கு, பெறுமதியான இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது மாணவர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது பாடசாலையில் இசைக் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மாணவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதன்படி, மிகக் குறுகிய காலத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, டிரம்பெட், டிராம்போன், சாக்ஸபோன், கிளாரினெட், மவுண்டபிள் டெம்பரின் உள்ளிட்ட இசைக் கருவிகள் பரிசளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரஜிதி கீர்த்தி தென்னகோன்,

இந்நாட்டின் கல்வித் துறையை மாற்றியமைக்கும் வகையிலான கல்வி வௌ்ளை அறிக்கை நாம் பாடசாலை கல்வி கற்ற காலத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்கு தற்காலத்தில் போலவே அன்றும் பெருமளவான எதிர்ப்புக்கள் கிளம்பின. அதனால் கல்வி வௌ்ளை அறிக்கையின் உள்ளீடுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. அதில் குறிப்பிடப்பட்ட ஓரளவான விடயங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். அன்று அவர் கல்வித்துறையில் செய்ய முற்பட்ட மாற்றங்களை செய்திருந்தால் இன்று நாட்டுக்கு சிறந்த கல்வி முறையொன்று கிடைத்திருக்கும் என கல்வி வௌ்ளை அறிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கிய எனக்கு இப்போது புரிகிறது.

எவ்வாறாயினும், கொழும்பிலிருந்து வெலிமடைக்குச் செல்லவிருந்த ஜனாதிபதி தற்செயலாகவே இந்த பாடசாலைக்கு வருகை தந்தார். அன்று வானிலையின் பாதிப்பு ஏற்பட்டிருக்காமல் அவர் வெலிமடைக்குச் சென்றிருந்தால் இன்று இந்த பாடசாலைக்கு இசைக் கருவிகள் கிடைத்திருக்காது. தற்செயலாக ஜனாதிபதி வருகைத் தந்த இந்த பாடசாலை மாணவர்கள், நாடகம் மற்றும் இசைத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். திறமை, அர்பணிப்பு, இயலுமை கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும், அதிபரும் இப்பாடசாலையில் உள்ளனர்.

அதனால் வாழ்க்கையில் தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளும் நாம் நம்பிக்கையுடன் இருக்கும் பட்சத்தில் நடைமுறையில் சாத்தியமாகலாம் என்ற பாடத்தை கற்க வேண்டும். ஒரு தற்செயலால் வாழ்க்கையை மாற்ற முடியும். பல சிறப்பானவர்களின் வாழ்வில் தற்செயலாள நிகழ்வுகளே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அவ்வாறான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள நீங்கள் அறிவு, கல்வி, அனுபவம், ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்வை வளப்படுத்த உங்களாலேயே முடியும். நாட்டின் ஜனாதிபதி, ஆளுநர், அதிபர் உள்ளிட்டவர்களால் மட்டும் உங்கள் வாழ்வை வளப்படுத்த முடியாது. தமக்கு விருப்பமான விடயம் தொடர்பில் கல்வி அறிவைப் பெற்றுக்கொள்ள உரிய பரீட்சைகளில் சித்திபெற வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் உங்கள் எதிர்கால வாழ்க்கை கடினமாகதான அமையும்.

அதேபோல் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க அச்சப்படக்கூடாது. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரான நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும். நாடு முழுவதுமாக முடங்கிக் கிடந்தது. தனமல்வில பகுதியைச் சேர்ந்த நந்தலால் வீரசிங்கவே அந்த நிலையிலிருந்து மீண்டு வர வழிகாட்டினார். ஜனாதிபதியின் அரசியல் தெரிவுக்கான நுட்பமான வேலைத் திட்டத்தை அவரே கொண்டுவந்தார். பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க அச்சப்படக்கூடாது என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். அச்சமற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் வெற்றியும் அடைவர்.

தற்போதைய ஜனாதிபதிக்கும் அதுவே நடந்தது. தேர்தலில் தோல்வியுற்று ஒரு ஆசனத்தை மட்டும் பெற்றிருந்த தருணத்தில், நாட்டைப் பொறுப்பேற்றுமாறு கூற வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தூரநோக்கம், இயலுமை, இலக்கு இருந்திருக்காவிட்டால் இன்று நாம் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க முடியாது. அதனை செய்யும் இயலுமை அவருக்கு மட்டுமே இருந்தது.” என்று தெரிவித்தார்.

வெல்லவாய கல்வி வலயத்தின் பணிப்பாளர் கே.ஜே.சுசில் விஜேதிலக்க, வெல்லவாய பிரதேச செயலாளர் கே.கே.ரவீந்திர மாலினி, வெல்லவாய கல்வி வலயத்தின் அழகியல் கலை இணைப்பாளர் வசந்தா ரோஹினி திசாநாயக்க, புதுருவகல மகா வித்தியாலய அதிபர் எச். எம். யு.பி.ஹேரத், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்னர்.

பணிக்கூற்று

Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.