கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.
கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும்(Combat All Terrain Vehicle) கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.
தற்போது இலங்கை கடற்படையின் பொறுப்பில் உள்ள இந்த வாகனங்களின் பயன்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்னிலையில் காண்பிக்கப்பட்டன.
கடற்படையின் பிரதிப் பிரதானியும் பணிப்பாளர் நாயகமுமான (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, பணிப்பாளர் மரைன் கொமடோர் சனத் பிடிகல மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஐடியல் குழுமத்தின் தலைவர் நலீன் ஜே.வெல்கம ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.