ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஊடாக இந்து சமுத்திரம் மற்றும் வான்வெளியை நிரந்தர அமைதி வலயமாக அறிவித்துள்ள இலங்கை அதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ள அர்பணிப்புடன் செயற்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
சாதமான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்காக தற்போதுள்ள வலய அமைப்புகள் மற்றும் முன்னெடுப்புக்களுடனும் கைகோர்த்துச் செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதற்காக இந்து சமுத்திரத்திர வலயத்தின் அனைத்து பங்குதாரர்களும் சாதகமான கலந்துரையாடல் ஒன்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
ரத்மலான ஈகல்ஸ் லேக்சைட் அரங்கத்தில் நேற்று (09) நடைபெற்ற “கொழும்பு வான்வெளி கலந்துரையாடல் 2023” நிகழ்வில் பிரதம அதியாக கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையினால் 06 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வானது ஒக்டோபர் 09 – 10 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் உள்ளடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்கள் பலரும் “கொழும்பு வான்வெளி கலந்துரையாடல் 2023” நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு மூலோபாய கல்வித் துறையின் முன்னோடிகளில் ஒருவரான மலேசியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் (CDISS) பேராசிரியர் எடம் லியோன் கொன்வே (Adam Leong Kok Wey) இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,
“இலங்கை விமானப்படையினால் 06 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். 2015- 2016 களில் “சமுத்திர வான்வெளி பாதுகாப்பினூடாக தேசத்தை கட்டியெழுப்புதல்” என்ற தொனிபொருளின் கீழ் இந்நிகழ்வு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை யுத்த நிலைமையிலிருந்து விடுபட்ட அல்லது யுத்தத்தின் இறுதி காலக்கட்டத்தில் இந்நாட்டின் வான்வெளி எல்லையில் பல்வேறு அத்துமீறல்கள் இடம்பெற்றன. அதனால் அக்காலத்தில் வான்வெளி பாதுகாப்பு என்ற விடயம் காலோசிதமான பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்து சமுத்திர வலயம் கடல் வர்த்க செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பு, மூலோபாயம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியில் உலக தொடர்பாடல்களுக்கு மாற்றமடைந்துள்ள தருணத்தில், இந்து சமுத்திரத்தின் ஒத்துழைப்பு தேவையை மேம்படுத்தும் வகையில் இம்முறை தொனிப்பொருள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வலயத்தின் இருப்பு மற்றும் ஆதிக்கத்திற்காக அழுத்தம் கொடுக்கும் பிரதான தரப்புக்களுடனேயே இந்து சமுத்திரத்தின் மூலோபாய அமைவிடம் அதன் இலக்குகளை அடைந்துள்ளது. வர்த்தக பாதைகளுக்கு அருகில் கடுமையாக யுத்த நிலைமையை தக்கவைத்துக்கொள்வதே அவர்களின் தேவையாக உள்ளது.
அதன்படி வலயத்திற்குள் உலக பலசாலிகளில் வருகை அவதானத்துடன் பார்க்க வேண்டிய விடமாகியுள்ளது. இந்து – பசுபிக் வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரதேசத்தின் மூலோபாய முக்கியத்தும் சீனாவின் உலகளாவிய எழுச்சியுடன் தொடர்புடையதாகும்.
ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவுக்கிடையில் காணப்படும் அதிகார மோதல்களுக்கு மத்தியில் சீனாவினால் வலய ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை ஆராய்வதற்கான அழுத்தங்கள் இந்தியாவின் மீது செலுத்தப்படுகின்றன. இதற்கு இணையாக இந்து சமுத்திரத்திர வலயத்தின் மூலோபாய மற்றும் அரசியல் ரீதியான நகர்வுகள் உலகின் தொடர்சியான அவதானத்திற்குரிய விடயங்களாக மாறியுள்ளன.
புவிசார் மூலோபாய தன்மை வலயத்தின் பயனுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு முக்கியமானதாக அமைவதால், அதனால் பொதுத் தேவைகளுக்கு அச்சுறுத்தலோ அபாயமோ இருக்காது என்ற எண்ணம் எம்மிடத்தில் இருக்க வேண்டும்.
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்குச் சமூகம் இந்து சமுத்திரத்தின் மீது அக்கறை காண்பிப்பது முன்னேற்றகரமானது என்பதோடு, இது வலயத்தின் பலசாலிகளின் அழுத்தங்களை அதிகரிப்பதாக அமநை்திருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதனால் ஒத்துழைப்பின் நிமித்தமாக இந்து சமுத்திர வலயத்தின் பங்குதாரர்கள் அனைவரும் சாதகமான முறையில் கலந்துரையாடலுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானதாகும். தொடர்பாடல் வழிமுறைகயைளை உறுதிப்படுத்தல், பலதரப்பு இணக்கப்பாட்டிற்கு அமைவான இந்து சமுத்திர வலயத்தின் சட்டங்கள் தொடர்பிலான ஐ.நா உடன்பாட்டை (UNCLOS) மையப்படுத்திய சட்டத்தை பின்பற்றுதல் மற்றும் பலதரப்பு மற்றும் இருதரப்பு வரைவுக்குள் பயன்படுத்தக்கூடிய வலயத்தின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
வலயத்தின் பாதுகாப்பு திட்டம், வலயத்தின் பொதுவான அடையாளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வலயத்தின் தலைமைத்துவ கட்டமைப்பொன்று இல்லாமை என்பன இந்து சமுத்திரம் வலுவான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. சாதகமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக நாம் தற்போது காணப்படும் வலய கட்டமைப்பு மற்றும் முன்னெடுப்புக்களுடன் இணைந்துகொள்ளவும் ஒத்துழைப்புக்களை வழங்கவும் முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.
தென்கிழக்காசியாவை போன்று விரிவான ஆசிய – பசுபிக் மற்றும் இந்து சமுத்திர வலயங்களின் பாதுகாப்பு திட்டத்தை வடிவமைப்பதற்காக இந்து – பசுபிக் வலய ஆசியான் அமைப்பின் தெரிவுக்கமைய தலைமைத்துவத்தை வழங்க முயற்சிப்போம். இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக அந்த தலைமைத்துவம் அமைந்திருக்கும்.
பிம்ஸ்டெக் மற்றும் ஆசியான் வலய ஒன்றியம் போன்ற ஆசிய அமைப்புக்கள் வலயதினால் பின்பற்ற வேண்டிய ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும். இருப்பினும் மேற்கு அவுஸ்திரேலியா முதல் தென்னாபிரிக்கா வரையில் விரிவடைந்து காணப்படும் பாதுகாப்பு மற்றும் இந்து சமுத்திரத்தை அண்மித்திருக்கும் நாடுகளின் அமைப்புகளும் எம்முடன் உள்ளன. இந்த பொறிமுறையானது அரசியல் ரீதியாக உயர் மட்ட பேச்சுக்களை நடத்துதல் மற்றும் உரிய செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறந்ததும் வெளிப்படையானதுமான தேர்வாக இருக்கலாம்.
இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் இவ்வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை அதன் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அந்த கூட்டத்தில் மேற்படி தலைப்புக்கள் தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
இந்து சமுத்திரம் பெருமளவில் மோதல்கள் அற்ற வலயமாக காணப்படும் நிலையில் இந்து பசுபிக் மோதல்களின் தாக்கங்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அனைத்து தருணங்களிலும் அதிகார மோதல்களை இந்து சமுத்திரத்திற்கு வெளியில் தக்கவைத்துக் கொள்வது சிறந்தாகும்.
இலங்கை இராணுவ அமைப்புக்களிலிருந்து விலகி நிற்பதோடு இந்து சமுத்திரம் மோதல்கள் அற்றதாக நீடிக்க வேண்டும் என்ற மத்தியஸ்த நிலைப்பாட்டை கொண்டுள்ளது. 1971 களில் இலங்கை ஐ.நா பொதுச்சபையில் இந்து சமுத்திரத்தை மோதல்கள் அற்ற வலயமான அறிவித்திருந்தது. அது வலயத்திற்குள்ளான கடல்வழி போக்குவரத்து மற்றும் வான்வெளி போக்குவரத்தினை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.
வலயத்திற்குள்ளும் வெளியிலும் காணப்படும் சேர்க்கையின் அவசியம் மற்றும் தலையீடு ஆகியவற்றை அறிந்துகொண்டு அவற்றை ஒன்றிணைக்க வேண்டிய சவால் எம்மத்தியில் உள்ளது. அதற்காக ஆரம்பத்திற்கு வித்திடும் வகையில் விமானப் படையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
இத்துறையில் பெரும் அனுபவங்களை கொண்ட பேராசிரியர் லியோன் எடம் கொன்வோயும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார்.
பல தசாப்தங்களான விமான உற்பத்திகள் அதிகரித்துள்ளன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் மேலும் உற்பத்தி பெருகியது. இதன்போது தொழில்நுட்பங்களுக்கு மாறாக பெரும் அளவிலான உற்பத்தி தொடர்பில் மாத்திரமே கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோல் சம்பிரதாய முறைகளை போன்று துப்பாக்கிச் சூடுகளை நடத்தவும், குண்டுத் தாக்குதல்களை நடத்தவுமே அவை பயன்படுத்தப்பட்டன. மனித உயிர்களுக்கு பெறுமதி இருந்தாலும் மேற்படி விடயங்கள் பற்றியே அன்று அவதானம் செலுத்தப்பட்டது. இருப்பினும் நாம் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளோம்.
தொழில்நுட்பம், ஆயுத உற்பத்தி மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் என்பவற்றிலும் முன்னேற்றங்கள் காணப்படுவதோடு, அவற்றின் பயன்பாடுகள் ஊடாகவும் பயன்களை பெற்றுக்கொள்கிறோம்.
முன்னர் ரேடார்களிலிருந்து தப்பித்துக்கொள்ள தாழ்வாக பறக்கும் முறைமை காணப்பட்டது. உலக யுத்தத்தின் போது அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இருப்பினும் தற்போது அதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களை கொண்டு ரகசியமாக பறக்க முடிந்துள்ளது.
இன்று தாக்குதலை நடத்துவதற்கு விமானங்கள் அவசியமில்லை. அண்மைளில் இந்தியா நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மேலாக பறக்கும் MQ-9B தானியங்கி ட்ரோன் விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளது. அவ்வாறான பாரிய முன்னேற்றங்களை காண முடிகின்றது.
இந்த இக்கட்டான நேரத்தில் சுதந்திரமானதும் வெளிப்படையனதுமாக இந்து -பசுபிக் வலயம் இருப்பதை உறுதி செய்ய முனையும் இலங்கை சிறியதொரு நாடாகும். இலங்கையின் வகிபாகத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி.
ட்ரோன் விமானங்களை வழங்கி இந்தியா உதவும் அதேநேரம், கடற்படை வலிமையை மேம்படுத்துவதற்காக உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, அத்மிரல் ஒப் தீ பிலீட் வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்களுடன் முப்படை தளபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC, making it over 2000 years old. Richard McClintock, a Latin professor at Hampden-Sydney College in Virginia, looked up one of the more obscure Latin words, consectetur, from a Lorem Ipsum passage, and going through the cites of the word in classical literature.